பழுதடைந்த கடலோர பாதுகாப்பு குழும படகுகள் : படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்துள்ள கடலோர பாதுகாப்பு குழும படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2020-02-16 19:29 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் பழுதடைந்துள்ள கடலோர பாதுகாப்பு குழும படகுகளை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட 52 மீனவ கிராமங்களை உள்ளடக்கிய கடற்கரை பகுதிகளுக்கு, 3 கடலோர பாதுகாப்பு குழும படகுகள் உள்ளன. அதில் 2 படகுகள் பழுதடைந்த நிலையில், ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. எனவே, மீனவர்களுக்கு பாதிப்பு வந்தால் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும், எனவே படகுளை சீரமைக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்