செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு : உயர் நீதிமன்றத்தில் முறையீடு மனு

திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில், முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2020-02-06 02:29 GMT
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி,  வேலை வாங்கி வருவதாக கூறி 2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி  செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர்   வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மேல் விசாரணை மேற்கொண்டுள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை, அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரிய வழக்கில், விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அவரை கைது செய்யக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தனது வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதாகக் கூறி, செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி ஆதிகேசவலு முன் முறையீடு செய்யப்பட்டது. எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என காவல்துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில்,  சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத  நீதிபதி ஆதிகேசவலு, சோதனை மேற்கொள்ள தடைவிதிக்க முடியாது என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்