"இருமொழிகளிலும் தஞ்சை கோயிலில் குடமுழுக்கு" - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-01-31 08:20 GMT
தஞ்சை பெரிய கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த குடமுழுக்கை, தமிழில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோரும், சமஸ்கிருத மொழியில் நடத்த வேண்டும் என மயிலாப்பூரை சேர்ந்த ரமேஷ் உள்ளிட்டோரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி - ரவீந்தரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலைய துறை சார்பில் பிரமாண பத்திரம் ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியானது தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அளித்த உறுதியை செயல்படுத்தியது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்