சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரம் : "விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்" - தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2020-01-23 10:30 GMT
சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனாருக்கு, சிலை அமைக்கக் கோரிய வழக்கு, நீதிபதிகள், சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், சுந்தரலிங்கனாருக்கு, சிலை வைக்கும் மனுதாரரின் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாகவும், ஜெயலலிதாவின் சிலை போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார். பொதுஇடங்களில் உள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவது தொடர்பாக 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,  அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்