போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயற்சி - இருவர் கைது

சென்னையில் போக்குவரத்து காவலரை கார் ஏற்றி கொல்ல முயன்றதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-01-23 09:41 GMT
வண்ணாரப்பேட்டை, சிங்காரத் தோட்டம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமரன். வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் நிலையத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாரிமுனை ராஜாஜி சாலையில்  நிறுத்தி வைக்கப்ட்டிருந்த காரை அப்புறப்படுத்துமாறு கார் உரிமையாளரிடம் செந்தில் குமரன் கூறியுள்ளார். ஆனால் அவருடன் தகராறில் ஈடுபட்ட கார் உரிமையாளர்கள், செந்தில்குமரன் மீது காரை மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்குமரன், சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த பெரோஸ்கான் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்