தில்லை காளியம்மன் கோயில் உண்டியலில் கொள்ளை - ஆசிட் ஊற்றி உண்டியலை உடைத்து பணம் திருட்டு

சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மீது ஆசிட் ஊற்றி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2020-01-19 11:55 GMT
சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 5 அடி உயரமுள்ள சில்வர் உண்டியல் மற்றும் அங்கிருந்த 6 உண்டியல்களும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணம் திருடப்பட்டது. கோயிலுக்குள் வந்த கொள்ளை கும்பல் உண்டியலின் மீது ஆசிட்டை ஊற்றி பணத்தை திருடிச் சென்றுள்ளனர். மேலும் உண்டியலில் பொருத்தப்பட்டிருந்த எலக்ட்ரானிக் டிவைஸ் சரிவர வேலை செய்யாததால் அலாரம் செயல்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர். நகரின் பிரபலமான கோயிலில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்