வில்சன் கொலைக்கும், இலங்கை இளைஞருக்கும் தொடர்பா? - கீழக்கரையில் போலீசார் தீவிர விசாரணை
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலைக்கும், ராமநாதபுரத்தில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் முகமது அப்பாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலைக்கும், ராமநாதபுரத்தில் தங்கியிருந்த இலங்கை இளைஞர் முகமது அப்பாஸ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இந்திய பிரஜை போல் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை வைத்திருந்ததால் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய தமீம் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் இவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் தமீம் யாரையெல்லாம் சந்தித்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருவதால் கீழக்கரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.