புத்தாண்டு கொண்டாட்டம் - முதலமைச்சருக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து
ஆங்கில புத்தாண்டையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார்.;
ஆங்கில புத்தாண்டையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு மற்றும் சிறந்த நல்லாட்சிக்கான முதல் மாநிலமாக தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். சென்னையில் உள்ள முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார்.