ஸ்டெர்லைட் வழக்கு : 16ம் தேதி முதல் 5 நாட்கள் விசாரணை நடைபெறும் என தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் மூன்று மாதங்களுக்கு பிறகு வரும் 16ம் தேதி முதல் மீண்டும் விசாரணை தொடங்குகிறது.

Update: 2019-12-14 09:23 GMT
ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு இந்த வழக்கை 28 நாட்கள் விசாரித்தது. இந்நிலையில், நீதிபதி சிவஞானம், சுழற்சி முறையில்  மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டிருந்தார். தற்போது, தலைமை நீதிபதி உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு, டிசம்பர் 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஸ்டெர்லைட் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்