தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் : விளையாடி மகிழ்ந்த பள்ளி மாணவ - மாணவியர்

நெல்லை மாவட்டம் புதூர் ஊராட்சி பள்ளியில் தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.;

Update: 2019-12-12 22:08 GMT
நெல்லை மாவட்டம் புதூர் ஊராட்சி பள்ளியில் தமிழ் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 150- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, பல்லாங்குழி, பம்பரம் சுற்றுதல், கோலிகுண்டு, கில்லி, கபடி,பரமபதம், உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை விளையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, ஞாபகசக்தி ஊட்டும் வகையில் இந்த போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக போட்டியை நடத்தியவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த போட்டிகள் நடத்த அரசு பள்ளி அட்டவணையில் இடம் ஒதுக்கவேண்டும் எனவும் அவர்கள் கேட்டுகொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்