திருக்கார்த்திகை திருவிழா கோலாகலம் : தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.;
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளில் பவனி வந்த தேரை ஏராளமான பக்தர்கள், அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர்.