திருப்பூரில் செல்போன் டவர் மீது இளைஞர் ஏறி போராட்டம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே செல்போன் டவர் மீது இளைஞர் ஒருவர் ஏறி நின்ற படி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே செல்போன் டவர் மீது இளைஞர் ஒருவர் ஏறி நின்ற படி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாச்சி தேர்தலில் வார்ட் வரையறை செய்த போது, ஆண்களுக்கான வார்டை, பெண்களுக்கு ஒதுக்கி குளறுபடி செய்யப்பட்டது என்பதே போராட்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார், நவநீதன் என்ற அந்த இளைஞரை கீழே அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.