"வெங்காய விலை உயர்வு கவலை அளிக்கிறது" - ராமதாஸ்

வெங்காய விலை உயர்வு கவலை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-07 06:35 GMT
கடும் வெங்காய விலை உயர்வு கவலை அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒருகிலோ வெங்காயம் 240 ரூபாய் வரை உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய, வெங்காய இறக்குமதியை விரைவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜனவரி மாதம் உள்நாட்டு உற்பத்தி தொடங்கிவிடும் என்பதால், அப்போது, இறக்குமதி தேவையில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமதாஸ் கோரியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்