குழந்தைகளின் ஆபாச படத்தை அதிகம் பார்க்கும் பட்டியல் : சென்னை முதலிடம்

உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-11-29 21:34 GMT
உலகிலேயே குழந்தைகளின் ஆபாச படத்தை பார்க்கும் நகரம் சென்னை என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.க்கு, குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் குவிந்தன. இதனையடுத்து, ஆய்வில் இறங்கிய அந்த அமைப்பு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்கும் அதிகம் பார்க்கும் நாடு இந்தியா என்றும், அதிலும் குறிப்பாக சென்னைக்கு முதலிடம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் படி, மத்திய உள்துறை தமிழக போலீசுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்