கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு - டிச.2 - டிச.5க்குள் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும்
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் நிலையில் 822 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.;
அரசு பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் நிலையில் 822 கணினி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்காக நடந்த எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது ஒரு பணியிடத்திற்கு இரண்டு பேர் வீதம் 1560 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய பெயர் மதிப்பெண் விவரம் அடங்கிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . சம்பந்தப்பட்ட தேர்வர்கள், வரும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் 5ஆம் தேதிக்குள் தங்களுடைய சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவுறுத்தி உள்ளார் .