புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-11-15 19:17 GMT
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பணையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக  கிரண் குரலா நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்,திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், ராணிப்போட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினியை நியமித்து தமிழக தலைமைச்செயலாளர் சண்மூகம் உத்தரவிட்டுள்ளார். ஆட்சியராக நியமிக்கப்பட்டவர்கள்,தமிழக அரசின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்