மாமல்லபுரத்தை அழகுபடுத்த நடவடிக்கை என்ன

புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது;

Update: 2019-11-12 05:44 GMT
மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து, புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு, நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தனர். மேலும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக, 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்