ராஜ ராஜ சோழனின் 1034-வது சதயவிழா :2 ஆம் நாள் நிகழ்வுகள் கோலாகலம்

தஞ்சையில் ராஜ ராஜ சோழனின் 1034-ஆவது சதயவிழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்றது.

Update: 2019-11-06 07:31 GMT
தஞ்சையில் ராஜ ராஜ சோழனின் 1034-ஆவது சதயவிழாவின் முக்கிய நிகழ்வான யானை மீது திருமுறை வீதி உலா நடைபெற்றது. சதய விழாவின் 2ஆம் நாளான இன்று, ராஜ ராஜ சோழனின் சிலைக்கு அரசு சார்பில் ஆட்சியர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, யானை மீது திருமுறை வீதி உலா வந்தது. தெற்கு, வடக்கு உள்ளிட்ட நான்கு ராஜவீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. இதில் பங்கேற்ற சிவனடியார்கள், பக்தர்கள் தேவாரம் பாடல்பாடியபடி சென்றனர். இசை கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள்,  ராஜராஜசோழன் விருது  வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்