முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? - பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.;

Update: 2019-10-19 08:06 GMT
முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் மூல ஆவணங்கள் எங்கே? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க, 1985ஆம் ஆண்டு வாங்கிய பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாக காட்டி உள்ளதாக தெரிவித்துள்ள ராமதாஸ்,  அந்த இடத்திற்கான நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவதன் மர்மம் என்ன என்று கேட்டுள்ள ராமதாஸ், தனியாருக்கு சொந்தமான  இடத்தில் ஆதி திராவிடர் மாணவர் விடுதி வந்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்