சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை - ஐந்தரை லட்சம் ரூபாய் பறிமுதல்

சென்னை அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில், சுமார் ஐந்தரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2019-10-18 21:51 GMT
சென்னை மயிலாப்பூர்  சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், சார் பதிவாளர் முத்துகண்ணனிடம் 40 ஆயிரம் ரூபாய் கைப்பற்றபட்டது. இது தொடர்பாக முத்துக்கண்ணன் மற்றும் இடைத்தரகர் பிரபுல்லா சந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதே போல் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயும், கொரட்டூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்