பல மாதங்களாக பூட்டி கிடக்கும் கழிப்பறை-பெற்றோர் வேதனை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.;

Update: 2019-10-18 04:09 GMT
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில மாதங்களாக தலைமை ஆசிரியர் இல்லை என தெரிகிறது. இதனால் அன்பு என்ற ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தலைமையில் பள்ளியில் பெற்றோர்களுக்கான சந்திப்பு நடைபெற்றுள்ளது. அங்கு வந்த மாணவர்களின் பெற்றோர்  இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை சீரமைக்காத‌தால்,  பள்ளி, சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தபடுவதாக புகார் கூறினர். இதேபோல, பள்ளியில் உள்ள கழிவறை பல காலமாக பூட்டியே கிடப்பதால் மாணவர்கள் கண்ட இடங்களை கழிவறையாக பயன்படுத்தி வருவதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்