"போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவியுங்கள்" - தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்
அரசு போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.;
அரசு போக்குவரத்து ஊழியர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிவதாகவும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக அறிவிக்குமாறு தமிழக அரசை, விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.