வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நடவடிக்கை-42 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு

வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்காக, மாவட்ட வாரியாக 42 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-10-16 13:24 GMT
வடகிழக்கு பருவமழை நாளை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் , ஒரு நாள் முன்கூட்டியே இன்றே வடகிழக்கு பருவமழை துவங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ள  தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. இதன் ஒரு அங்கமாக சென்னை தவிர்த்து மற்ற 31 மாவட்டங்களுக்கு தலா ஒரு அதிகாரி என 31 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மட்டும் சந்தோஷ் மிஸ்ரா, பாலச்சந்திரன், ஆசியா மரியம், வள்ளலார் ,சுப்பையன் உள்ளிட்ட 11 அதிகாரிகள் என மொத்தமாக 42 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்