அரசு நிலங்களில் பேனர் வைக்க விலக்கு அளித்த விவகாரம் - டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அரசு நிலங்களில் பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி பெற தேவையில்லை என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Update: 2019-10-16 11:51 GMT
இளம்பெண் சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பேனர் வைப்பதற்கு எதிராக பல்வேறு ஆண்டுகளில் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பேனர்கள் வைப்பதற்கு தனிநபருக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தடை விதித்த‌து. ஆனால் அரசு நிலங்கள், அரசு சொத்துகளில் பேனர் வைக்க, தமிழக அரசு அனுமதி பெற தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருந்த‌து. இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பாக அவரது வழக்கறிஞர் ஜி.எஸ் மணி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.   சாலைகள் அரசுக்கு சொந்தமானது என்பதால், இந்த தீர்ப்பு சாலையில்  பேனர் வைக்க, தமிழக அரசு அனுமதி பெற தேவையில்லை என்ற தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என டிராபிக் ராமசாமி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்