இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கணக்கில் வராத பண நடமாட்டத்தை கண்காணிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சியினரின் செலவுகளை கண்காணிக்கவும் கணக்கில் வராத பண நடமாட்டத்தை கண்காணித்து பறிமுதல் செய்யவும் வருமான வரித்துறையினருக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-10-02 02:10 GMT
அந்த தொகுதிகளில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து பொது மக்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் 
நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் செலவீன முறைகேடு குறித்து பொதுமக்கள் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணும், இ-மெயில் முகவரியும்  கொடுக்கப்பட்டுள்ளது.

9445467707 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும்  பொதுமக்கள் தகவல்களை அனுப்பலாம் என்றும் வருமானவரித்துறை அறிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்