பா.சிவந்தி ஆதித்தனார் 84வது பிறந்த நாள் இன்று... நினைவு இல்லத்தில் மலர் மாலை வைத்து மரியாதை
பத்மஸ்ரீ விருது பெற்ற பா. சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.;
பத்மஸ்ரீ விருது பெற்ற பா. சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அவரது படத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் சி.பால சுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார்கள்.