ஆசிரியர்கள், மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர்

ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து தாம்பரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-09-22 02:38 GMT
சென்னை  அனகாபுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் குன்றத்தூரை சேர்ந்த மாணவிக்கு அரசு மடிக்கணினி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆசிரியர்கள் சிலர் மாணவியிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மாணவியின் தாயார் புகாரின் பேரில்  12 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்கள் மீது தாம்பரம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியர்கள் மீது பொய்யான புகாரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறி, தாம்பரம் காவல்நிலையத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கை ரத்து செய்யாவிட்டால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்