உண்டியல் வைத்து பணம் வசூலித்த ஜீவ சமாதி சாமியார் - 7 பேர் மீது வழக்கு, போலீசார் அதிரடி நடவடிக்கை

சிவகங்கை அருகே ஜீவ சமாதி அடைய போவதாக கூறி உண்டியல் வசூலில் ஈடுபட்ட சாமியார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-09-16 10:18 GMT
சிவகங்கை மாவட்டம் பாசாங்கரை என்ற ஊரில் பிறந்தவர் இருளப்ப சாமி, 77 வயதான இவர் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவில் ஜீவ சமாதி அடையப்போவதாக அறிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருளப்பசாமிக்கு, அந்த இடத்தில் சமாதி ஒன்றும் கட்டப்பட்டது. ஏராளமான மக்கள் அவர் ஜீவ சமாதி அடையும் நிகழ்வை காண ஆர்வமாக அங்கு குவிந்தனர். இதில் பலர் அங்கிருந்த உண்டியலில் பணத்தை காணிக்கையாக செலுத்தினர். ஆனால், இருளப்ப சாமி அறிவித்தபடி, இரவு 12 மணியில் இருந்து 5 மணி வரை அவர் உயிர் பிரியவில்லை. இதனால், அவரை காண வந்த திடீர் பக்தர்கள் கலைந்து சென்றனர். இருளப்ப சாமியும் அவரது வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜீவ சமாதி அடைய போவதாக கூறி உண்டியல் வசூலில் ஈடுபட்ட சாமியார், அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீது இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்