கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 53,600 கன அடியாக குறைப்பு

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 53 ஆயிரத்து 600 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-09-11 07:37 GMT
இன்று காலை 9 மணி மணி நிலவரப்படி, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து 41 ஆயிரம்  கன அடியாக இருந்த  நிலையில், காவிரி கால்வாயில் நீர் வெளியேற்றம் 38,600 கன அடியாக உள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.80 அடி உயரத்திற்கு தற்போது  நீர் இருப்பு உள்ளது. இதேபோல, கபினி அணைக்கு நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 15 ஆயிரம்  கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இரண்டுட அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 53 ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததை அடுத்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்