ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி

ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2019-09-06 08:32 GMT
தமிழக அரசு, கடந்த ஆகஸ்ட்17 ஆம் தேதி பசும் பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு 28-லிருந்து 32 ரூபாயாகவும், எருமை பாலுக்கான விலையை 35-லிருந்து 41 ரூபாயாகவும் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் ஆவின் பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்திய தமிழக அரசு, அதனை ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இந்நிலையில் ஆவின் பால் விலை உயர்வு தொடர்பான, தமிழக அரசின் உத்தரவை முழுமையாக ரத்து  செய்யக்கோரி திருவண்ணாமலையை சேர்ந்த முனிக்கிருஷ்ணன் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, எந்த ஆவணங்களும் வழக்கில் இணைக்கப் படாமல், வழக்கு தொடர்ந்தது ஏன்? என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில்கொண்டே பால் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனை அடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தெரிவித்ததை தொடர்ந்து, அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்