பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த காவலர் : ஓடும் பேருந்தில் நடத்துனரிடம் வாக்குவாதம்

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த காவலர் வாக்குவாதம் செய்ததால் பேருந்து நடத்துனர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Update: 2019-09-03 11:08 GMT
திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துநராக கோபிநாத் என்பவர் இருந்துள்ளார். விருத்தாச்சலத்திற்கு அந்த பேருந்து வந்த போது, திட்டக்குடியில் காவலராக பணிபுரியும் பழனிவேல் அதில் ஏறியுள்ளார். 

அப்போது பயணத்திற்கான டிக்கெட் எடுக்க வேண்டும் என நடத்துனர் கோபிநாத் கூறியுள்ளார். ஆனால் தான் போலீஸ் என கூறிய பழனிவேல், தன்னால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறியுள்ளார். 

அப்போது காவலருக்கான அடையாள அட்டையை காட்டுமாறு நடத்துநர் கூறியதற்கும் பழனிவேல் முறையாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டை வாங்க வேண்டும் என நடத்துநர் திடமாக கூறியதால் இருவருக்கும் இடையே பேருந்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது திடீரென நடத்துநர் கோபிநாத் மயக்கம் போட்டு பேருந்தின் உள்ளேயே விழுந்தார். இதையடுத்து அவரை நெய்வேலி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது தான் அவர் மாரடைப்பில் உயிரிழந்தது தெரியவந்தது. 

பேருந்தில் நடந்த வாக்குவாதத்தால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு நடத்துனர் கோபிநாத் உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த காவலர் பழனிவேலை பொதுமக்கள் பிடித்து மந்தாரக்குப்பம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். 

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய ஊழியர்கள், காவலர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனிடையே, காவலர் பழனிவேல் மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டுள்ளார். காவலரின் அலட்சியத்தால் அரசு பேருந்து நடத்துனர் மாரடைப்பால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்திய ஊழியர்கள், காவலர் பழனிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இதனிடையே, காவலர் பழனிவேல் மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்