திருமங்கலம் அருகே பாட்டி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 21 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

திருமங்கலம் அருகே ஆரியபட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.;

Update: 2019-08-30 09:58 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆரியபட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  இதனைத் தொடர்ந்து முத்தையன்பட்டியில் உள்ள அவரது  பாட்டி வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 21 கிலோ கஞ்சா அங்கு இருந்தது  தெரியவந்தது. அந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சுந்தரபாண்டியனை  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்