தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய், குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தன் தாய் மற்றும் 5 வயது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2019-08-26 13:52 GMT
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தன் தாய் மற்றும் 5 வயது மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளி பத்து என்ற கிராமத்தை சேர்ந்த பவிதா , நீண்ட நாட்களாக வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் இதுவரை இவருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படாத‌தால் இன்று ஆட்சியர் அலுவலகத்தில், தாய் மேரி மற்றும் 5 வயது மகனுடன் மண்ணென்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயற்சித்தார். அங்கிருந்த அதிகாரிகள் அவரை தடுத்து காப்பாற்றினர். இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்