ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்
ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.;
ஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.
அங்குள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தில் முகாமிட்டுள்ள மூன்று காட்டுயானைகள், விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை வனப்பகுதியிலிருந்து மாரியப்பன் மற்றும் பரணி ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஓசூர் வனக்கோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன. ஆனால், சாதகமான சூழல் இல்லாததால் காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. சாதகமான சூழல் ஏற்படும் பட்சத்தில், இன்று மாலை அல்லது நாளை காலை காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்போம் என கூறப்பட்டுள்ளது.