விநோத தண்டனை வழங்கிய நீதிமன்றம் - நிறைவேற்றிய மாணவர்கள்

கல்லூரியில் ஒழுங்கீன நடவடிக்கை ஈடுபட்ட மாணவர்கள் 8 பேர் நீதிமன்ற உத்தரவுப்படி விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-15 07:43 GMT
கடந்த ஜனவரி மாதம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவர்கள் 8 பேர் மது அருந்தி விட்டு கல்லூரிக்கு சென்றுள்ளனர். அவர்களை கல்லூரி நிர்வாகம் இடை நீக்கம் செய்தது. தங்களை மீண்டும் கல்லூரிக்குள் அனுமதிக்க கோரி மாணவர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ், மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும்  தவறை உணரும் வகையிலும் சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து மாணவர்கள்  8 பேரும்  காமாராஜர் நினைவு இல்லத்தை சுத்தம் செய்யும் பணியில் இன்று ஈடுபட்டனர். ஒழுங்கின செயல்களில்  ஈடுபட மாட்டோம் என அவர்கள் உறுதியேற்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்