டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார்.

Update: 2019-08-13 23:11 GMT
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார். அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய தண்ணீரை எடப்பாடி பழனிச்சாமி, பூ தூவி வரவேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறப்பு

இதனிடையே, மேட்டூர் அணை , 65வது முறையாக 100 அடியை எட்டியது.  இரவு 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 புள்ளி 70 அடியாக இருந்தது. தற்போது, நீர் வரத்து விநாடிக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம், மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்