கருணாநிதியின் திருவுருவ வெண்கல சிலை திறப்பு

ஆறரை அடி உயரத்தில் கருணாநிதி அமர்ந்து கடிதம் எழுதுவது போல் வடிவமைக்கப்பட்ட வெண்கல திருவுருவ சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.;

Update: 2019-08-07 19:11 GMT
முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலக வளாகத்தில், அவரது சிலை திறந்து வைக்கப்பட்டது.  ஆறரை அடி உயரத்தில் கருணாநிதி அமர்ந்து கடிதம் எழுதுவது போல் வடிவமைக்கப்பட்ட வெண்கல திருவுருவ சிலையை  மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் வீரமணி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்