நீல நிறப்பட்டு - பூக்களால், அத்திவரதர் அலங்காரம் : நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம்

நீல நிறப்பட்டு - பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அத்திரவதர், நின்ற கோலத்தில் காட்சி அளித்தார்.

Update: 2019-08-01 19:56 GMT
காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்  அத்திவரதர் உற்சவத்தில் கடந்த 31 நாட்களாக சயன கோலத்தில் காட்சி தந்த அத்திவரதர், நின்ற கோலத்தல் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஊதா நிறப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு, நின்ற கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை, அதிகாலை முதலே வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

சிரமம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. காஞ்சிபுரத்தில் 10 ஆயிரம் பேர் தங்கும் வகையில் இரண்டு மிகப்பெரிய பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். வீல் சேரில் செல்லும் முதியோருக்கு தனி வரிசை உள்ளதாகவும் பாதுகாப்பு பணியில் 7700 காவலர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்திவரதர் உற்சவ அன்னதான திட்டம் தொடக்கம் 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அன்னதான திட்டத்தை தொடங்க உத்தரவிட்டார். அதன்படி இந்த அன்னதான திட்டத்திற்கு பொதுமக்களிடம் இருந்து ஆன்-லைன் மூலம் 10 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டு அன்னதான திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்