இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் : காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்

நீதிமன்ற உத்தரவுபடி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.;

Update: 2019-07-25 05:12 GMT
நீதிமன்ற உத்தரவுபடி, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாள் கடை வீதியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ரஞ்சித், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலம் குறித்து விமர்சித்தது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரஞ்சித் தாக்கல் செய்த மனு மீது உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளை, கும்பகோணம் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் ஆஜராகி இரு நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனையடுத்து, கும்பகோணம் நீதிமன்றத்தில், நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற அவர், நிபந்தனைபடி திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்