மஞ்சள் நிறப் பட்டாடையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 24ஆம் நாளான இன்று, மஞ்சள் நிறப் பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார்.

Update: 2019-07-24 03:02 GMT
காஞ்சிபுரத்தில், அத்திவரதர் உற்சவத்தின் 24ஆம் நாளான இன்று, மஞ்சள் நிறப் பட்டு ஆடை அலங்காரத்தில், அத்திவரதர் அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதலே திரளான பக்தர்கள், அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். நேற்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்த நிலையில் கடந்த இருபத்தி மூன்று நாட்களாக 31லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஆகம விதிப்படி அவர் நாளை முதல் நின்ற நிலையில் தரிசனம் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நின்ற நிலையில் தரிசனம் தர உள்ளார். இதற்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் முதல் 17ஆம் தேதி வரை நின்ற நிலையில் தரிசனம் தரும் அத்திவரதர், ஆகஸ்ட் 18ஆம் தேதி மீண்டும் நீருக்கடியில் வைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்