கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கண்டனம் - மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்

என்.ஐ.ஏ அமைப்பின் சட்டங்களை திருத்துவதன் மூலம் மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்ள முயற்சிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2019-07-20 11:46 GMT
என்.ஐ.ஏ அமைப்பின் சட்டங்களை திருத்துவதன் மூலம், மாநில அரசின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை மத்திய அரசு பறித்துக் கொள்ள முயற்சிப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில், அக்கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. அப்போது, தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதை எதிர்த்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது, என்.ஐ.ஏ சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்