உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு : வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.;

Update: 2019-07-16 08:33 GMT
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இதுதொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ராதாமணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், நாளை நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்