குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிர் காக்கப்பட்டதால் பெற்றோர் மகிழ்ச்சி - அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

குறைப் பிரசவத்தில் 855 கிராம் எடையுடன் பிறந்த பெண் குழந்தையை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

Update: 2019-07-15 18:46 GMT
ஒசூர் பட்டவராப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தேஜஸ்வனிக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால், கடந்த மே மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 7 மாத பெண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த பச்சிளங்குழந்தை 855 கிராம் எடையில் இருந்தது. மேலும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு குழந்தையின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர், தனியார் மருத்துவமனையிலிருந்து குழந்தையை ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  கடந்த 60 நாட்கள் மருத்துவர்கள் அளித்த தொடர் சிசிச்சையால் குழந்தையின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டது.தற்போது குழந்தையின் உடல் எடை ஆயிரத்து 240 கிராமாக அதிகரித்தது. அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பச்சிளங்குழந்தை உயிர் காக்கப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதால் குழந்தையின் பெற்றோர் ஒசூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்