"நீட் விலக்கு பெற சட்ட ரீதியில் நடவடிக்கை" - பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-10 09:23 GMT
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தொடர்பான விவாதத்தில் குறுக்கிட்ட முதலமைச்சர், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறினார். காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு போராடிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இடைமறித்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் உண்மை மறைக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமர்சித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்