பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கு - 9 பேர் நீதிமன்றத்தில் சரண்
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 9 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.;
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 9 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து டேனியல், தமிழ்செல்வன், சேது, காசி , கார்மேகம், உள்ளிட்ட 9 பேர் சென்னை 4 -ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், ஜனார்த்தனன் ஆகியோர் சரணடைய கூடுதல் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் சரணடையவில்லை.