நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் விவகாரம் - தமிழக அரசு இயற்றிய சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய இரண்டு சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.;

Update: 2019-07-06 12:04 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு,  இரண்டு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 2017 -18 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரு சட்ட மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுக்கு வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கத்தினர் தொடர்ந்தது என 4 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த‌போது, மத்திய உள்துறை சார்பு செயலாளர், 2 சட்ட மசோதாக்களும், நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறியதாக,  மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மசோதாக்கள் பெறப்பட்ட தேதிகள், நிராகரிக்கப்பட்ட தேதிகளை அறிக்கையாக தாக்கல் செய்யும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்