10% இடஒதுக்கீடு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்திய பிறகே மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

உயர்சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகே, தமிழகத்தில் மருத்துவத்திற்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் இந்திய மருத்துவ கழகத்தின் செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-07-04 22:58 GMT
உயர்சாதியினருக்கான 10%  இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகே, தமிழகத்தில் மருத்துவத்திற்கான கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவ
கழகத்தின் செயலர், மற்றும் சுகாதாரத்துறை  செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையை சேர்ந்த கிருஷ்ண நாயர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றாததால் தமது மருத்துவ கனவு பறிப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால், 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்திய பிறகே, மருத்துவத்திற்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்திய மருத்துவ கழகத்தின் செயலர், மற்றும் சுகாதாரத்துறை  செயலர் ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்