உமரியார் S.செளந்தர் முருகன் மணிமண்டப திறப்பு விழா : தந்தி டி.வி. இயக்குநர் ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு

சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் உமரியார் S.சவுந்தர் முருகனின் மணிமண்டபத்தை, தந்தி டி.வி. இயக்குநர் ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார்.;

Update: 2019-07-02 09:24 GMT
சென்னையை அடுத்த அம்பத்தூர்-புழல் நெடுஞ்சாலையில் சூரப்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ள அன்னை S.J.P. வணிககூடத்தில், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநிலத் தலைவர் உமரியார் S.சவுந்தர் முருகனுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட  தந்தி டி.வி. இயக்குநர் ஆதவன் ஆதித்தன், உமரியார் சவுந்தர் முருகனின் மணிமண்டபம் மற்றும் உருவச் சிலையை திறந்து வைத்தார். விழாவில் சமத்துவ மக்கள் கழக கட்சி தலைவர்  எர்ணாவூர் நாராயணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்