அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பெயர் பலகையில் அதனை குறிப்பிட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.;

Update: 2019-06-29 06:23 GMT
சட்டபேரவையின் மதிப்பீட்டு குழு வெளிட்டுள்ள அறிக்கையில், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பெயரில் இயங்கி வரும் நிலையில், அந்த பள்ளி தனியார் பள்ளி என கருதி பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேரடியாக அரசு உதவி பெறும் பள்ளிகள், அதனை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தங்கள் பெயர் பலகையில் பொறிக்க வேண்டும்  என முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் அந்தப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்