காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

காவல்துறை உயர் அதிகாரிகள் 3 பேர் ஏ.டி.ஜி.பி.-க்களாகவும், 6 பேர் ஐ.ஜிக்களாகவும், 4 பேர் டிஐஜிக்களாகவும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-26 09:06 GMT
காவல்துறை உயர் அதிகாரிகள் 3 பேர் ஏ.டி.ஜி.பி.-க்களாகவும், 6 பேர் ஐ.ஜிக்களாகவும், 4 பேர் டிஐஜிக்களாகவும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஐ.ஜி.க்களாக இருந்த மகேஷ் குமார் அகர்வால், வெங்கடராமன், வினித் தேவ் வான்கடே ஆகியோர் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி.க்களாக இருந்த செந்தில் குமார், பிரேம் ஆனந்த் சின்கா, வனிதா, நஜ்முல் ஹூடா, டி.எஸ். அன்பு, மகேந்திர குமார் ரத்தோட் ஆகிய 6 பேர் ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், எஸ்.பி.க்களாக இருந்த பிரவீன்குமார், ரூபேஷ்குமார் மீனா, ஆனி விஜயா, சத்யபிரியா ஆகிய 4 பேருக்கு, டி.ஐ.ஜிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது தவிர சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக, சங்கரும், சென்னை மத்திய குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக, ஈஸ்வரமூர்த்தியும், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக கபில் குமாரும், 
வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக காமினியும், சேலம் சரக டிஐஜியாக பிரதீப் குமாரும், திருச்சி சரக டிஐஜியாக பாலகிருஷ்ணனும், சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக சுதாகரும், உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக கண்ணன் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்